1. Home
  2. தமிழ்நாடு

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து My V3 Ads செயலி நீக்கம்..!

1

கோவையை தலைமையிடமாகக் கொண்டு மை வி3 ஆட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வந்தார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி உறுப்பினராகச் சேர்ந்தால் வருமானம் வந்து கொண்டே இருக்கும், ஒவ்வொரு வீடியோவும் பார்க்க பார்க்க பணம் கொட்டும் எனக் கூறி வந்தனர்.

தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்த்தால் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

பொதுமக்களிடம் ரூ.360 முதல் 1.21 லட்சம் வரை பணம் வாங்கிவிட்டு அவர்களை ஏமாற்றுவதாகப் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்தார். அதன்படி மை வி3 ஆட்ஸ் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக சக்தி ஆனந்தன், விஜயராகவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை டான்பிட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தற்போது சக்தி ஆனந்தன் சிறையில் இருந்து வருகிறார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், My V3 செயலில் Playstore இல் இருந்து நீக்கப்பட்டு உள்ளது லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like