1. Home
  2. தமிழ்நாடு

போராட்டத்தில் இறங்கிய MY V3 ADs நிறுவனர்... கைது செய்த போலீசார்..!

1

தமிழகம், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மக்கள்  MY V3 ADs   என்ற நிறுவனத்தில் தங்களது முதலீடை போட்டு ,அதன் மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். இந்த ஆப் பிரபலமானதற்கு காரணம் மொபைல் போனில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என அந்த நிறுவனம் அறிவிதித்திருந்தது. தான். ஆனால் இந்த நிறுவனத்தால் வருங்காலத்தில் மக்கள் ஏமாற வாய்ப்புள்ளது என கோவை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் பேரில் இந்நிறுவனத்தின் நிறுவனரையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அவர்கள் புகார் அளிக்க சென்ற போது காவல் ஆணையர் மீட்டிங்கில் இருக்கின்றார் அதனால் அவர்களிடம் சக காவலர்கள் புகாரை எழுதி வாங்கி கொண்டு அவர்களை அடுத்த வாரம் வருமாறு வலியுறுத்தினர். ஆனால் காவல் ஆணையரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று சக்தி ஆனந்த் மற்றும் ஆதரவாளர்கள் காவல் ஆணையர் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like