என்னுடைய அடுத்த படம் இவருடன் தான் !! ராஜமௌலி அறிவிப்பு

என்னுடைய அடுத்த படம் இவருடன் தான் !! ராஜமௌலி அறிவிப்பு

என்னுடைய அடுத்த படம் இவருடன் தான் !! ராஜமௌலி அறிவிப்பு
X

பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், என்டிஆர் ‘தியாகி கொமரம் பீமாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். பெரும் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் நேரலையில் பேசிய ராஜமௌலி, ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ராஜமௌலி கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மகேஷ் பாபு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newstm.in

Next Story
Share it