1. Home
  2. தமிழ்நாடு

நாட்டிற்காக தாலியை இழந்தவர் என் தாய் - பிரியாங்கா காந்தி வேதனை..!

1

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இன்னும் ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சமீபத்தில் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெண்களின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்து அதை மறுபங்கீடு செய்யும் என்று கூறியிருந்தார். இது மிக பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கிடையே  பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு காங்கிரஸின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.

“55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் யார் ஒருவருடைய தங்கத்தையவாது பறித்து இருக்கிறதா? போரின் போது தன்னுடைய தங்க நகைகளை நாட்டிற்கு கொடுத்தவர் எனது பாட்டி இந்திரா காந்தி. இந்த நாட்டிற்காக தனது மாங்கல்யத்தை இழந்தவர் எனது தாய் சோனியா காந்தி என உருக்கமாக பேசினார். தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக மோடி இவ்வாறு தரம் தாழ்ந்து பேசி வருவதாக பிரியங்கா விமர்சித்தார்.

Trending News

Latest News

You May Like