என் கணவரின் கடைசி ஆசை நிறைவேத்துவிங்களா முதலமைச்சர் அய்யா !! டாக்டர் மனைவியின் கண்ணீர்.

என் கணவரின் கடைசி ஆசை நிறைவேத்துவிங்களா முதலமைச்சர் அய்யா !! டாக்டர் மனைவியின் கண்ணீர்.

என் கணவரின் கடைசி ஆசை நிறைவேத்துவிங்களா முதலமைச்சர் அய்யா !! டாக்டர் மனைவியின் கண்ணீர்.
X

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் , தூய்மை பணியாளர்கள் , காவல் துறையினர் என பலரும் இரவு , பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் , செவிலியர்கள் பங்கு மிகப்பெரியது. தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்து தான் மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த வைரஸ் உடன் தினம் தினம் போராடி கொண்டுதான் டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

அந்த அபாயத்தின் உச்சமாகதான் சென்னை டாக்டர் பாதிக்கப்பட்டு, 2 தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது, கொரோனாவைரஸ் தங்களுக்கும், தங்கள் பகுதிக்கும் வேகமாக பரவி விடும் என்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த செயலின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. இந்த நிலையில்தான் டாக்டரின் மனைவி கண்ணீருடன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ;

என் பெயர் ஆனந்தி. என் கணவர் கடந்த 19 ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்துட்டாங்க.. அவங்களை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் பண்ண பாதர் ஒப்புதல் தந்தார். ஒரு சில சம்பவத்தின் காரணமாக வேலப்பன்சாவடியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டார். புதைக்கப்படும் போது கூட எங்க கண்ணால் அதை பார்க்கிறதுக்கு முடியல.. என் கணவரை வெண்டிலேட்டரில் போடுவதற்கு முன்னாடி என்கூடயும், பிள்ளைங்களோடயும் வீடியோகாலில் பேசினாரு..

ஒருவேளை நான் திரும்பி வரலேன்னா என்னை நம்மை முறைப்படி அடக்கம் பண்ணிடுங்கன்னு சொன்னாரு.. என் கணவரை ஷீல்டு செய்த சவப்பெட்டியில்தான் புதைக்கப்பட்டிருக்கு. அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைகளில் அடக்கம் பண்ணினால் எந்த தொற்றுமே பரவாது.. மாண்புமிகு முதலமைச்சரிடம் பணிவோடு நான் கேட்கிறேன் ஐயா. என் கணவருடைய கடைசி ஆசையை நிறைவேத்துங்க என்று உருக்கமாக கூறியுள்ளார். இந்த வீடியோ வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Newstm.in

Next Story
Share it