இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: சுனிதா கெஜ்ரிவால்..!

இரண்டு நாட்களுக்கு முன்பு, கெஜ்ரிவால் டெல்லியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். மத்திய அரசு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவர்கள் டெல்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்ன?. இந்த வழக்கால் கெஜ்ரிவால் மிகவும் வேதனை அடைந்துள்ளார்.
மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சுமார் 250-க்கும் அதிமான சோதனைகளை நடத்தியுள்ளது. ஊழல் என சொல்லி அவர்கள் பணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை.
கெஜ்ரிவால் இன்று 28-ம் தேதி நீதிமன்றத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். மதுபான ஊழல் வழக்கின் பணம் எங்கே சென்றது என்பதைத் தெரிவிப்பார். அனைத்து ஆதாரங்களையும் அளிப்பார். இவ்வாறு சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்.