1. Home
  2. தமிழ்நாடு

சிலிண்டர் விலையை குறைத்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..!

1

டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க முடிவு செய்செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.400 வரை குறையும். எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியத் தொகையை மத்திய அரசு கொடுத்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர்  நரேந்திரமோடிக்கு நன்றி! ஓணம் மற்றும் ரக்‌ஷா பந்தன் பண்டிகைகளை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை  ₹200 குறைக்கப்பட்டுள்ளது!  உஜ்வாலா திட்டத்தின்கீழ்  75 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.  உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர் மானியம்  ₹200 லிருந்து  ₹400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், பயனடைவார்கள். சமையல் எரிவாயு விலையை குறைத்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like