"என் அப்பாவுக்கு குடியும், பெண்களும் சகஜம்" : பீட்டர் பாலின் மகன் பளீர்!

"என் அப்பாவுக்கு குடியும், பெண்களும் சகஜம்" : பீட்டர் பாலின் மகன் பளீர்!

என் அப்பாவுக்கு குடியும், பெண்களும் சகஜம் : பீட்டர் பாலின் மகன் பளீர்!
X

தன்னுடைய அப்பா டீடோட்டலர் இல்லை என்றும், அவருக்கு குடியும், பெண்களும் சகஜமான விஷயம் என வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலின் மகன் தெரிவித்துள்ளார். 

சர்ச்சைக்கு பெயர் பெற்ற வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலின் மனைவி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது கணவரான பீட்டர் பால் ஒரு குடிக்காரர் என்றும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.


அதற்கு பதில் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என்றும் அவர் அசைவம் கூட சாப்பிட மாட்டார் என்று கூறினார். பீட்டர் பாலின் பெயரை கெடுக்க அவரது மனைவி இப்படி பேசுவதாக தெரிவித்தார். இந்நிலையில் பீட்டர் பாலின் கடந்த காலம் குறித்து அவரது மகன் புட்டு புட்டு வைத்துள்ளார். தன்னுடைய அப்பாவுக்கு அஃபையர் எல்லாம் புதிதல்ல என்ற அவர், வேலை செய்யும் இடமெல்லாம் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்று கூறியுள்ளார். அவருக்கு பெண்களும் குடியும் சகஜமான ஒன்று தான் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it