அண்ணன் திருமாவளவன் எனக்கு பாடம் நடத்திய வாத்தியார் – சீமான்..!
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்போது த.வெ.க கட்சி கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் கூறியதாவது:
சென்னையில் வரும் 6-ந்தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் – திருமாவளவன் பங்கேற்பது கூட்டணி நோக்கி பயணிக்கிறதா? என் அண்ணன் என்னிலும் முதிர்ந்தனர். என்னிலும் அனுபவமும் அரசியல் அறிவும் பெற்றவர். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள்.
என் அண்ணன் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான தவறுகளை எல்லாம் செய்ய மாட்டார். நானே இவ்வளவு நிதானமாக இருக்கும்போது என் அண்ணன் எவ்வளவு ஆழமாக சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும்.
அண்ணன் எனக்கு பாடம் நடத்திய வாத்தியார். அவர் அதுபோன்ற தப்பு செய்ய மாட்டார். என் வாத்தியார் தப்பு செய்ய மாட்டார் என்று மாணவன் நான் உறுதியாக சொல்ல முடியும். சொல்லுவேன் என்று கூறினார்.