1. Home
  2. தமிழ்நாடு

எங்க முதலாளி நல்ல முதலாளி : ஊழியர்களுக்கு கார் பரிசளித்த தனியார் நிறுவனம்..!

1

சென்னையை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு எஸ்யூவி காரை பரிசாக தந்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது. Agilisium என்பது சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஒரு கன்சல்டிங் நிறுவனம் ஆகும்.

சென்னை பெருங்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்நிறுவனம் லைஃப் சயின்ஸ் பிரிவில் தொழில்நுட்ப சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கின்றன. இந்த 10 ஆண்டுகள் முடிந்திருப்பதை கொண்டாடும் வகையில் இந்த நிறுவன உரிமையாளர் 25 ஊழியர்களுக்கு புதிய எஸ்யூவி காரை பரிசாக வழங்கியிருக்கிறார் .

 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 25 ஊழியர்களை தேர்வு செய்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான SUV கார்களை தனியார் நிறுவன உரிமையாளர் பரிசளித்தார்.

சென்னை உலக வர்த்தக மையத்தில் அமைந்திருக்கும் agilisium நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த பத்தாண்டு கால கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் இந்த 25 ஊழியர்களுக்கும் கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 10 ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வரவேண்டும் என இதன் தலைமை செயல் அதிகாரியான ராஜ் பாபு அறிவித்து இருந்தார். இதனை அடுத்து அனைத்து ஊழியர்களும் தங்களுடைய குடும்பத்தினரோடு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நிறுவனத்திற்காக வேலை செய்து 25 ஊழியர்களுக்கு அவர் காரினை பரிசாக வழங்கியுள்ளார். இது தவிர பல்வேறு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் . ஊழியர்கலே நிறுவனத்தின் முதுகெலும்பு என குறிப்பிட்டு இருக்கும் agilisium நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ராஜ் பாபு இது போன்ற செயல்பாடுகள் ஊழியர்களை இன்னும் உற்சாகமாக வேலை செய்ய வைக்கும் என கூறியுள்ளார்.

தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக கார்களை பரிசளித்ததாக தெரிவித்தார். அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் கார்கள் பரிசளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.இது நிறுவனத்திற்கு ஊழியர்களுக்கும் இடையே ஒரு உணர்வு ரீதியான இணைப்பை உண்டாக்குகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் . agilisium நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜ்பாபுவால் தொடங்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like