1. Home
  2. தமிழ்நாடு

எனது கதையில் விஜய்சேது நடிக்க வேண்டாம்! முத்தையா முரளிதரன் அறிக்கை!



"எனது வாழ்வியல் திரைப்படத்தில் நடிக்க வேண்டாம்" என நடிகர் விஜய்சேதுபதிக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படமான '800' படத்தின் மோஷன் போஸ்டர் அக்டோபர் 13-ம் தேதி வெளியானது. தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர் முத்தையா முரளிதரன். அதனால், முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளா். அதில், எனது சுயசரிதையை விளக்கும் 800 படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என் மீதான தவறான புரிதலே இதற்கு காரணம். அதனால் விஜய்சேதுபதிக்கு அழுத்தம் தரப்படுவதை நான் அறிவேன். என்னால் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை.

இடையில் ஏற்படும் தடைகளால் நான் சோர்ந்துபோவதில்லை. இந்த படம் இளம் தலைமுறைக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும் என்பதாலே சம்மதித்தேன். அதற்கு இப்போது தடை ஏற்பட்டுள்ளது.

இந்த தடை விரைவில் நீங்கும் என தயாரிப்பு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நான் எப்போதும் தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன். எனக்கு ஆதரவு வழங்கிய நல்உள்ளங்களுக்கும்., நடிகர் விஜய் சேதுபதிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like