முழுவதும் 30 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் முத்தமிழ் தேர்..!

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் புறப்பட்டது.
எழுத்தை மூச்சாகக் கொண்ட கருணாநிதி பயன்படுத்திய பேனாவடிவில் ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படங்கள் ஊர்தியின் வெளியே இடம்பெற்றுள்ளன. அவரது சிறப்புகளை விளக்கும் குறும்படத்தை திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த ஊர்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
வாகனத்தின் உள்ளே முன்னாள்முதல்வர் கருணாநிதி வசித்தகோபாலபுரம் இல்ல உள்வடிவமும், அதில் அஞ்சுகம் அம்மாள்சிலையும், அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்த அலங்கார ஊர்தி, வரும் டிசம்பர் 4-ம் தேதி சென்னைக்கு வரும்”என்றார்.