1. Home
  2. தமிழ்நாடு

ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம்கள் வீட்டிலேயே இருங்கள், வெளியே வர வேண்டாம்..!

1

காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அனுஜ் சவுத்ரி சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், ஹோலி பண்டிகையின் போது முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த முறை ஹோலி பண்டிகை மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இது ரமலான் மாதம் என்பதால் முஸ்லீம்கள் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.

"ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு வாரமும் தொழுகை மேற்கொள்ள முடியும். தொழுகை சமயத்தில் கொண்டாட்ட மனநிலையில், மற்றவர்கள் வண்ணங்களை பூச வாய்ப்புள்ளதால் முஸ்லீம்கள் கொண்டாட்டம் முடியும் வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இது உத்தரப்பிரதேசத்தை தாண்டி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது மற்றும் விவாதங்களை தூண்டி உள்ளது. இந்நிலையில் சமீபத்திய ஒரு மாநாட்டில் பேசிய முதல்வர் ஆதித்யநாத், பல்வேறு மத சமூகத்தினரிடையே, குறிப்பாக பண்டிகை சமயங்களில் பரஸ்பர மரியாதையின் அவசியத்தை எடுத்துரைத்து டிஎஸ்பி அனுஜ் சவுத்ரியின் கருத்துக்களை வரவேற்றுள்ளார்.

பண்டிகைகளின் போது நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த சமயத்தில் பிரார்த்தனைகள் ஒத்திவைக்கப்படலாம் என்று வலியுறுத்தி உள்ளார். முஸ்லீம்கள் வெளியே வராமல் தங்கள் வீடுகளில் இருந்தே பிராத்தனை செய்வது நல்லது என்று ஒரு முதல்வரே கூறி இருப்பது கடுமையான எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.

சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய பிளவு உணர்வுகளை தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறை அதிகாரி சௌத்ரியின் கருத்துக்கள் இரு சமூகங்களுக் கிடையேயான பதட்டங்களை அதிகப்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் ஆதித்ய கோஸ்வாமி, டிஎஸ்பிக்கு எதிராக புகாரை பதிவு செய்துள்ளார். டிஎஸ்பி மற்றும் முதல்வரின் இந்த கருத்துக்களுக்கு பல முஸ்லீம் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர், இது போன்ற கருத்துக்கள் சமூகத்தில் பிரிவுகளை ஏற்படுத்தும் என்றும், அமைதியை கெடுக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஹோலி பண்டிகை நெருங்கி வருவதால், ​​இந்தக் கருத்துகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேசம் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு மாநிலத்தில், இது போன்ற கருத்துக்கள் தவறான புரிதல் மற்றும் மோதலுக்க்கு வழிவகுக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தில் இது போன்ற பல்வேறு சர்ச்சைகள் அதிகரித்து வருவது அந்த மாநிலத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்கி உள்ளது.

Trending News

Latest News

You May Like