இன்று ரம்ஜான் கொண்டாட்டம் : பிற மதத்தினருடன் அன்பை பகிர்ந்து கொண்ட இஸ்லாமியர்கள்..!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த சிறப்பு தொழுகைகளில் புத்தாடை அணிந்து, பிராத்தனையில் பங்கேற்றனர்.
குறிப்பாக இப்பண்டிகையின் போது கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று இனிப்புகள் வழங்கி, கோவில் நிர்வாகிகளும் இந்து கடவுளின் படங்களை கொடுத்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இந்த தருணம் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை கரும்பு கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்திலும் சிறப்பு தொழுகையானது நடைபெற்றது. இதில் புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
கரும்புகடை பகுதியில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் தொழுகை முடிந்தவுடன் பாலஸ்தீனம் காசாவில் அமைதி நிலவ வேண்டியும், வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழங்கைகளில் கருப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை சிலர் எழுப்பினர்.