'கூலி' படத்தின் Chikitu பாடலின் மியூசிக் வீடியோ வெளியானது..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. அவருடன் நாகார்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் மிகப்பெரிய பான் இந்தியா நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வெறும் 0.56 நொடிகள் மட்டுமே வெளியான படத்தின் முதல் பாடலான ‘சிக்கிட்டு வைப்’ (chikittu vibe) ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது சிக்குட்டு வைப் பாடலின் முழு வீடியோ வரும் ஜூன் 25ஆம் தேதி மாலை வெளியாகும் என சன்பிக்சர் அறிவித்தது.
இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
Chikitu வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அதில் அனிருத், சாண்டி மாஸ்டர் மட்டுமின்றி டி.ராஜேந்தரும் ஆடி இருக்கிறார்.
இதோ பாருங்க.