1. Home
  2. தமிழ்நாடு

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது..!

1

ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஐஐடி மெட்ராஸ் பல்கலை கழகத்தில் புதுமைக்கான விருதை வழங்கி கௌரவித்துள்ளது. 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் லே மஸ்க் என்ற ஒரு மெய்நிகர் திரில்லர் திரைப்படத்தை இயக்கினார். 32 நிமிடங்கள் கொண்ட இப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை இயக்கி, இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். 

இந்நிலையில் லே மஸ்க் படத்தை இயக்கியதற்காக ஏ.ஆர் ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி பல்கலை கழகம் புதுமைக்கான விருதை வழங்கியது.

இந்த விருதை பெற்ற அவர் " சென்னையில் விருது வாங்குவது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. விர்சுவல் ரியாலிட்டி திரைப்படத்தை இயக்கிய மற்றவர்கள் செய்த தவறை இப்படத்தில் செய்யக்கூடாது என தெளிவாக இருந்தோம். இப்படத்தை இயக்க எங்களுக்கு ஸ்பெஷலான கேமரா தேவைப்பட்டது. நான் ஒவ்வொரு முறை மைக்ரோசாஃப்ட் மற்றும் இண்டெல் போன்ற பிராண்டுகளை பயன்படுத்தும்பொழுது. ஏன் அனைத்து பிராண்டுகளும் வெளிநாட்டில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஏன் இந்தியாவில் இருந்து வருவதில்லை என?. இதை அரசு கவனிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like