இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்..!

தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட தடை கோரி மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா சேர்க்கப்பட்டிருந்தார்.
எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா இன்று (பிப்., 13) நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் முன்வைத்தார். இளையராஜா இசையமைத்த பல படங்களில் பாடல்கள் அனுமதியின்றி யூடியூப், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.