1. Home
  2. தமிழ்நாடு

ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் இசை அமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம்..!

1

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .  வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் சுவாமி தரிசனம் தரிசனம் செய்த பின்பு மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் ஜெயந்தி விழா நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் இன்று இசையமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம் செய்தார்.

முதலில் செழிஞ்சுடர் விநாயகர் மற்றும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் , மானசா தேவியை வணங்கி , உமா தேவியார் , குரு தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ,  27 மகான்கள் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து தியான மண்டபத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அவருக்கு ஆசிரம தலைவர் லாயர் சந்திரமோகன் மற்றும் ஆசிரம செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பிரசாதங்களை வழங்கினர்.

இசையமைப்பாளர் அனிருத்தை பார்த்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரோடு நின்று செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவரும் அனைவரிடம் செல்பி புகைப்படத்திற்கு சிரித்தபடி நின்று போஸ் கொடுத்தார். இதனால் பக்தர்கள் மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் கிரிவலம் சென்றார்.

Trending News

Latest News

You May Like