1. Home
  2. தமிழ்நாடு

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை..!

1

சங்கீத கலாநிதி என்ற பெயரில் மியூசிக் அகாடமி விருது வழங்கி கலைஞர்களை கௌரவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமி முடிவு செய்தது. இதற்கு  சென்னை உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது.

இந்த விருதுடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.  மியூசிக் அகாடமியின் இந்த முடிவு, கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது.  எம்.எஸ்.சுப்பு லட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு, எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என இசை ரசிகர்கள் பலரும்   கேள்வி எழுப்பினர். டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை எதிர்த்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார்.

இன்று நவம்பர் 19ம் தேதி காலை இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில்  நீதிபதி ஜெயசந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயர் இல்லாமல் விருது வழங்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளார்.  

Trending News

Latest News

You May Like