1. Home
  2. தமிழ்நாடு

லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் முருகன் திடீர் மரணம் !

லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் முருகன் திடீர் மரணம் !


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளை தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த திருவாரூர் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முருகன் மீது ஏற்கனவே வங்கி கொள்ளை போன்ற வழக்குகளும் இருந்துள்ளது.

கைதாகும் போதே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் முருகன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.

லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் முருகன் திடீர் மரணம் !

உயிரிழந்த திருவாரூர் கொள்ளையன் முருகன் மீது சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. ஒருவேளை கொரோனா பாதிப்பு இருந்தால் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like