ஆன்மீகம் அறிவோம் : 12 ராசிகளுக்கான முருகன் மந்திரங்கள்..!

நாம் சாதாரணமாக வழிபாடு செய்வதை காட்டிலும் சுவாமியின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நமக்கு கூடுதல் பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், நாம் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது மந்திரங்களின் அதிர்வலைகள் நம்முடைய உடலை நேர்மறை சக்திகள் கொண்டு சூழ்ந்து மனதில் நம்பிக்கையை கொடுக்கிறது.
அதனால், 12 ராசிக்காரர்களும் தினமும் வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் உண்டான கர்மவினைகள் விலகி முன்னேற்றம் கிடைக்கும்.
12 ராசிகளுக்கான முருகன் மந்திரங்கள் :
மேஷம் - ஓம் ஷண்முகா போற்றி
ரிஷபம் - ஓம் கதிர்வேலா போற்றி
மிதுனம் - ஓம் முருகா போற்றி
கடகம் - ஓம் குகனே போற்றி
சிம்மம் - ஓம் மயில் வாகனனே போற்றி
கன்னி - ஓம் கார்த்திகை மைந்தா போற்றி
துலாம் - ஓம் குமார வேலவா போற்றி
விருச்சிகம் - ஓம் சேவற்கொடியோனே போற்றி
தனுசு - ஓம் தண்டாயுதபாணியே போற்றி
மகரம் - ஓம் சுப்ரமண்யா போற்றி
கும்பம் - ஓம் திருப்புகழ் பெற்ற தெய்வமே போற்றி
மீனம் - ஓம் சூரனை வென்ற குமாரா போற்றி