1. Home
  2. தமிழ்நாடு

நமக்கு இருக்கும் கடன் தீர தினமும் சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்..!

1

நம்மில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பணப் பிரச்சனை தான். இது இல்லாதவர்கள் மிக மிக குறைவு தான். அதிலும் பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த முடியாமலும், வட்டி செலுத்துவதற்கே வருமானத்தில் பெரும்பாலான தொகையை செலவிட்டும் தவிப்பவர்கள் ஏராளம். சிலர் மனிதர்களிடம் வாங்கிய கடனுக்காகவும், பெரும்பாலானவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

கடன் என்றால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருப்பது மட்டும் கடன் கிடையாது. பாவ சுமைகள் அதிகமாகி, கர்மவினை காரணமாக மீண்டும் மீண்டும் பிறந்து, துன்பப்பட்டுக் கொண்டே இருப்பதும் கடன் தான். இதை பிறவிக் கடன் என்பார்கள். பணத்திற்காக பட்ட கடன் மட்டுமின்றி, பிறவி கடனில் இருந்து விடுபட்டு முக்தி என்னும் பெரும் பேற்றை பெறுவதற்கும் இறைவனின் அருள் நமக்கு வேண்டும். அப்படி மனிதர்களின் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும் வகையிலான சக்திவாய்ந்த பல பாடல்களை அருணகிரிநாத சுவாமிகள் அருளி உள்ளார். அவற்றில் ஒன்று தான் கந்தர் அநுபூதி பாடல். அநுபூதி என்றால் அனுபவ ஞானம் என்று பொருள். கந்தப் பெருமான் தனக்கு அளித்த அனுபவத்தில் இருந்து பெறப்பட்ட ஞானத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என்பதற்காக பாடப்பட்ட பாடலாகும்.
 

அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அனுபூதியில் முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கான பல அற்புதமான பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த ஒரு குறிப்பிட்ட பாடலை தினமும் முருகப் பெருமானை மனதார நினைத்து பாடி வந்தால் கடன் சுமை என்பதே இருக்காது. அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து விட்டு, முருகப் பெருமான் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பூஜை அறையில் அமர்ந்து இந்த பாடலைப் படித்தால் எவ்வளவு அதிகமான கடன் சுமையால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து வெளிவரலாம்.

ஒரு வேளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து இந்த பாடலை படிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த பாடலை படித்து, "கந்தா கடம்பா கதிர்வேலா" என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். குறைந்த பட்சம் 6 முறையும், அதிகபட்சமாக 27 அல்லது 108 முறை சொல்வது நல்லது. அப்படி சொல்லி வந்தால் நிச்சயம் கடன் சுமையை முருகப் பெருமான் கரைத்து விடுவார்.

கடன் தீர்க்கும் கந்தர் அநுபூதி பாடல் :


"வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடிஅந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே!"

Trending News

Latest News

You May Like