டாஸ்மாக் கடைகளில் கொலை , கொள்ளை சம்பவம் !! சிசிடிவி கேமிரா பொருத்த தமிழக அரசு முடிவு

டாஸ்மாக் கடைகளில் கொலை , கொள்ளை சம்பவம் !! சிசிடிவி கேமிரா பொருத்த தமிழக அரசு முடிவு

டாஸ்மாக் கடைகளில் கொலை , கொள்ளை சம்பவம் !! சிசிடிவி கேமிரா பொருத்த தமிழக அரசு முடிவு
X

டாஸ்மாக் கடைகளில் கொலை, கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகளும் பலனில்லாமமே போகின்றன.

எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக, ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 3,000 கடைகளில் 6,000 கேமராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மண்டல வாரியாக எந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதில் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 545, கோவை 450, மதுரை 355 கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

Next Story
Share it