1. Home
  2. தமிழ்நாடு

முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் காலமானார்..!

1

40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறிய வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர் மதுரை மோகன். இவருக்கு அடையாளமே அவரின் கம்பீரமான மீசை தான். இந்த மீசை தான் பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது. அதனை தனது நடிப்பு திறமையால் நேர்த்தியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை நடிகர் காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில், “ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் ‘வீரன்’ பட இயக்குனர் சரவணன் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like