நடு வழியில் நிறுத்தி மும்பை-ஹவுரா ரயிலில் சோதனை..!
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் மும்பை ஹவுரா ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகவும் சற்று நேரத்தில் அது வெடிக்க போவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதை எடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து மும்பை ஹவுரா ரயில் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ரயில்வே போலீசார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முன்னதாக மும்பை ஹௌரா ரயில் ஜல் கான் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதை எடுத்து ரயிலின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை மற்றும் ஆய்வு நடத்தினர். ஆனால் ரயிலில் எந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறுகையில், மும்பை ஹவுரா ரயில் பயனிலை ஏற்றுக் கொண்டு ஜல்கான் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த குறுந்தகவுளில் மும்பை ஹவுரா ரயிலில் குண்டு வெடிப்பு நடக்க உள்ளதாகவும் மோசமான நாளாக இது மாறும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்டு அதிகாரிகள் ரயிலை செல்கான் ரயில் நிலையத்தில் நிறுத்தி உடனடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் ரயிலில் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. எனவே மும்பை ஹௌரா ரயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் பெரும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இதை எடுத்து அந்த ரயில் புறப்பட்டு பயணிகளுடன் சென்றது எனக் கூறினார்.