கேட்சுகளை கோட்டைவிட்ட மும்பை...ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
2012ம் ஆண்டுக்குப் பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே தழுவி வந்த நிலையில், இன்றைய போட்டியிலாவது வெற்றி காணுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஜெய்ப்பூரில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெறும் போட்டியில் RR – MI அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஹிட்மேன் ரோஹித் ஆகியோர் களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்க கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையைக் இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேற 6 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரை தொடர்ந்து களம் கண்ட சூர்யகுமாரும் பெரியளவில் ஜொலிக்காமல் 10 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து திலக் வர்மா – வதேரா இணை பொறுப்புடன் ஆடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடி வந்த திலக் அரை சதம் கடந்து அசத்த மறுமுனையில் மிரட்டி வந்த வதேராவும் அரை சதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி கட்டத்தில் மும்பை அணி ரன்கள் எடுக்க தவறிவிட்டது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.
அதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஸ்கோர்களை ஏற்றியது.
அந்த அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 60 பந்துகளுக்கு 104 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடக்கம். அதன்பின் அவருக்கு ஜோடியாக களமிறங்கிய ஜோஸ் பட்லர், சாவ்லாவின் பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது கிளீன் போல்டானார். அதன்பின் மூன்றாவதாக இறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 38 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,18.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.