1. Home
  2. தமிழ்நாடு

திமுக செஞ்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மஸ்தானின் , மனைவி , மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி..

திமுக செஞ்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மஸ்தானின் , மனைவி , மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி..


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சமீப காலமாக , சட்டமன்ற உறுப்பினர்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ. ஆர்டி அரசு க்கு தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்க அனுமதித்துள்ளனர். ஏற்கனவே ரிஷிவந்தயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரான மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி உறுதியாகியுள்ளது. திமுகவில் முன்னதாக 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 4 - வதாக மஸ்தானும் தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இன்றைய பரிசோதனை முடிவில் , அவருடைய மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் குடும்பத்தினர் மற்றும் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like