1. Home
  2. தமிழ்நாடு

'Mr.India' பட்டம் வென்ற திருவள்ளூரை சேர்ந்த மணிகண்டன் திடீர் உயிரிழப்பு..!

Q

திருவள்ளூரை சேர்ந்த மணிகண்டன் கடுமையான உடற்பயிற்சி மட்டுமின்றி பல போட்டிகளில் கோலோச்சி இந்திய அளவில் ஆணழகன் பட்டத்தை வென்றவர். 41 வயதான இவர், தனது அக்காள் கணவரை போன்று தாமும் ஜிம் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இந்திய அளவில் ஆணழகன் பட்டத்தை வென்றார்.

இதனைத்தொடர்ந்து தாம் வசிக்கும் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்த மணிகண்டன், பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார். மேலும் தான் கற்றுக் கொண்டதை இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து தன்னை போல மிஸ்டர் இந்தியா போன்ற பட்டங்களை வெல்வதற்கு ஆயத்தப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், வயிற்று வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மணிகண்டன் நேற்று கொண்டு செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பல போட்டிகளில் பரிசுகளை வென்றெடுத்த மணிகண்டன், அளவுக்கு அதிகமாக ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டதே இறப்புக்கு வழிவகுத்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவருக்கு அளவுக்கு அதிகமான ஊக்க மருந்து கொடுத்ததே இறப்புக்குக் காரணம் எனவும் இதில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் மணிகண்டனின் சகோதரி, தாயார் கூறியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like