1. Home
  2. தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்..!

Q

கரூரில் 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துசிறையில் அடைத்தனர். பின்னர், அவர்களை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற அனுமதியுடன் சிபிசிஐடி போலீஸார் கடந்த22-ம் தேதி 2 நாள் காவலில்எடுத்து, கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை நடத்தி, நேற்று அவர்களைகரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மீண்டும் ஆஜர்படுத்தினர்.
இதனிடையே, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களை மிரட்டி நிலத்தை வாங்கியதாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் அனுமதி வழங்கி நீதிபதி (பொ) பரத்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் வாங்கல் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Trending News

Latest News

You May Like