நாடாளுமன்றத்தில் பலான படம் பார்த்த எம்.பி!
நாடாளுமன்றத்தில் பலான படம் பார்த்த எம்.பி!

நாடாளுமன்ற கூட்டத்தின்போது எம்.பி. ஒருவர் ஆபாசப் படம் பார்த்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நாடாளுமன்ற கூட்டத்தின்போது பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. அப்போது ரொன்னாதேப் அனுவத் என்ற எம்.பி. தன்னுடைய செல்போனில் ஆபாச படம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து அந்த எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். தனக்கு வந்த செய்தி ஒன்றில் பெண் ஒருவர் அவசரமாக பண உதவி கேட்கிறார். கூடவே ஒரு புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதை திறந்து பார்த்தபோது ஆபாச புகைப்படம் இருந்தது. அதை வைத்து அந்த பெண் ஆபத்தில் இருக்கிறாரா? வற்புறுத்தப்படுகிறாரா? என்ற ரீதியில் ஆராய்ந்து வந்ததாக கூறியுள்ளார்.
இது எம்.பி.யின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
newstm.in