வரலாற்றில் இது வரை இல்லாதபடி 12 சதவிகித GST வரி விதிப்பு - எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம்..!
வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், நாத்திகரான கலைஞர் 'சூடம்' பக்தி பொருள் என்பதால் தமிழ்நாட்டில் வரி விலக்கு வழங்கினார். ஆனால் நீங்களோ வரலாற்றில் இது வரை இல்லாதபடி 12 சதவிகித GST வரி விதித்திருக்கிறீர்கள்.
சூடம் ஏற்றி சாமி கும்பிடும் ஒவ்வொரு பக்தனும் இந்த அநியாய வரிவிதிப்பு அரசு ஒழிய வேண்டும் என்றே இறைவனை பிரார்த்திப்பான் என பேசியுள்ளார். மேலும், சான்சத் தொலைகாட்சி இப்பொழுது வரை எனது வெள்ளை அறிக்கை மீதான உரையை பதிவேற்றம் செய்யாமல் இருப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-