1. Home
  2. தமிழ்நாடு

எம்.பி கார்த்தி சிதம்பரம் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு.. அவசரமாக தரையிறக்கம்..!

1

சென்னையில் இருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 117 பயணிகள் இருந்தனர். 7 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் பயணம் செய்துள்ளார். இந்த விமானம் மதுரைக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் அதாவது பிற்பகல் 2.30 மணியளவில் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்டதற்கான அபாய எச்சரிக்கை சிக்னல் வந்தது. இதையடுத்து அவசர அவசரமாக விமானம் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.

விமானத்தை பாதுகாப்பாக சென்னையில் தரையிறக்கிய விமானிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். விமானம் உரிய நேரத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த கார்த்தி சிதம்பரம் உள்பட 124 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like