1. Home
  2. தமிழ்நாடு

கர்ப்பத்தை அறிவித்த சினிமா ஜோடி..!

1

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருக்கும் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். மேலும், நடிகை கியாரா அத்வானி கர்ப்பத்தை அறிவித்து ‘நமக்கு சிறந்த பரிசு ஒன்று விரைவில் வர இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

2014ல் வெளியான ‘ஃபக்லி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் ஆன ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் ‘பரத் அனே நேனு’ படத்தில் நடித்து தெற்கிலும் பிரபலமானார்.நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ ஆந்தாலஜி படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய ஒரு பகுதியில் கியாரா நடித்த ஒரு காட்சி பேசுபொருளானது.

தொடர்ந்து கபிர் சிங், குட் நியூஸ், ஷெர்ஷா என ஹிட் படங்களில் நடித்து இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.தனது நீண்டநாள் காதலரான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.கடைசியாக இவர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர்  படத்தில் நடித்திருந்தார்

Trending News

Latest News

You May Like