1. Home
  2. தமிழ்நாடு

அபாய அளவைத் தண்டி வெள்ளம் கொட்டுவதால் 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து

1

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் சேவை மிகவும் புகழ்பெற்றது. இந்த பயணத்தில் அழகிய இயற்கை காட்சிகள் நம் கண்களுக்கும் விருந்தளிக்கும். ஊட்டி மலை ரயில் உலகப் புகழ் பெற்ற பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

இந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளூர் முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவர். இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்காக பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் இருந்த சமயத்தில் அமைக்கப்பட்ட மலை ரயில் வழித்தடம் இன்றளவும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மலை ரயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. மலை ரயில் பாதையில் அபாய அளவை தாண்டி நீர் கொட்டுவதால் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி அக்டோபர் 16, 17ம் தேதிகளில் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



 

Trending News

Latest News

You May Like