1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளே நோட் பண்ணுங்க..! சென்னையில் 1 வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

1

சென்னை மாவட்டத்தில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் மெட்ரோ வந்ததில் இருந்து போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது. அதனால் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.அதனால் இன்று (மார்ச் 14) முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் 14.3.2025 வரை ஒரு வருட காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பட்டுலாஸ் சாலை-ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட் சாலை திருவிக சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.மேலும் அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை- திருவிக சந்திப்பிலிருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.

அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை-ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலையில் திரும்பி விடப்படுகின்றது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like