1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளே உஷார்..! இன்று முதல் மாறும் முக்கிய விதிகள்..!

1

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனத்தில் ஓட்டுநர் சோதனைகளை மேற்கொள்ள முடியும். இந்த மையங்கள் சோதனைகளை நடத்துவதற்கும், உரிமத் தகுதிக்கான சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 900,000 பழைய அரசு வாகனங்களை படிப்படியாக வெளியேற்றுவதன் மூலம் மாசுபாட்டைக் குறைக்கவும் மற்றும் கடுமையான கார் மாசு விதிமுறைகளை அமல்படுத்தவும் இந்த புதிய விதிகள் நோக்கமாக கொண்டுள்ளது.

புதிய விதியின்படி, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டி பிடிபட்டால், ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இது தவிர, ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, கடுமையான அபராதமாக சிறுவர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர்களுக்கு ரூ.25000 அபராதம் விதிக்கப்படும். இதுமட்டுமின்றி, வாகன உரிமையாளரின் பதிவு அட்டை ரத்து செய்யப்படும், மேலும், சிறுவர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறமாட்டார்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டும் இன்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 என அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் அதிக எடையை ஏற்றுவது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையிலான விதிமீறல்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like