1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க.. இல்லையென்றால் அபராதம் தான்..!

1

இந்தியாவில் வாகனத்தினால் ஏற்படக்கூடிய மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கு அதன் தரநிலையை அளவிடுவது கட்டாயம்.இந்தியாவில் வாகனங்களில் தர நிலையை அளவிட்டு அதற்குரிய சான்றிழ்களை வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

சான்றிதழ்:

  • இந்தியாவில் வாகனத்தினால் ஏற்படக்கூடிய மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கு அதன் தரநிலையை அளவிடுவது கட்டாயம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வாகனங்களின் இருப்பு நிலை அதன் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அதற்கு முதலில் உங்கள் வாகனத்தை பதிவு செய்து மாசு உமிழ்வு சோதனை செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு மின்னணு உபகரணங்கள் வாயிலாக உங்களது வாகனம் பரிசோதனை செய்யப்படும். பிறகு உங்கள் வாகனத்தின் தரநிலை பற்றிய சான்றிதழ் அளிக்கப்படும். இதனை வாகன ஓட்டிகள் எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  • இல்லையெனில் உங்களுக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும். இதனை ஆன்லைன் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
  • ‘Vahan’ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதில் PUC Certificate என்ற பக்கத்தை ஓபன் செய்யவும்.
  • அதில் கேட்கப்படும் வாகன பதிவு எண், சோசிஸ் எண் ஆகியவற்றை பதிவிடவும்.
  • அடுத்தாக PUC தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதனை கிளிக் செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like