1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் ஷாக்..! தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலானது..!

1

தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோமீட்டர் தூரம் விரிவான தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன, இதனால் தற்போது தமிழ்நாட்டில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை, சுங்க கட்டணங்கள் 5% முதல் 10% வரை உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தங்களின் படி 1992ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதம் கட்டண உயர்வு உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 40 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக சுற்றறிக்கை அனுப்பியது. அதன் படி தமிழகத்தில் 78 சுரங்கச் சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வு, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் அபாயமும் உள்ளது.

இதன்படி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமா தேவி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


அதேபோல், நெல்லூர், நாங்குநேரி, பரனூர், திண்டிவனம் - ஆத்தூர், சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டரைப் பெரும்புதூர், சாலைபுதூர், செண்பகம் பேட்டை, புதுக்கோட்டை - வாகைகுளம், வாணியம்பாடி, வானகரம், சூரப் பட்டு, திருப்பாச் சேத்தி, பள்ளிக் கொண்டா, எஸ்வி புரம் ஆகிய இடங்களிலும் சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

Trending News

Latest News

You May Like