1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் ஷாக்..! நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது..!

1

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் விக்கிரவாண்டி வழியாகப் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்படி, நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணம் ரூ.105-ஆக மாறாமல் தொடர்கிறது. ஆனால் பலமுறை பயண கட்டணம் ரூ.155-இலிருந்து ரூ.160 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.3,100-லிருந்து ரூ.3,170 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல், இலகுரக வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் பல அச்சு வாகனங்களின் கட்டணமும் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளி பேருந்துகளுக்கு ரூ.1,000 வசூலிக்கப்படும். உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகை பாஸ் திட்டத்தில் மாற்றமில்லை. இலகுரக வாகனங்களுக்கு பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணமான ரூ.270- லிருந்து ரூ.275 ஆகவும், மாதாந்திரக் கட்டணமாக ரூ.5,425 லிருந்து ரூ.5,545 ஆகவும் உயா்த்தப்பட்டிருக்கிறது. டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.360 லிருந்துரூ.370 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணம் ரூ.540லிருந்து ரூ.545 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ. 10,845 லிருந்து ரூ.11,085 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு, ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் சுமையாக இருக்கும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிகரிப்பது அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like