1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் ஷாக்..! சுங்கச்சாவடி கட்டணம் வரும் செப்.1 முதல் உயர்வு..!

1

செங்குறிச்சி சுங்கச் சாவடியில் 2025 Sep 1 முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. கார் மற்றும் ஜீப் வகை வாகனங்களுக்கு தற்போது ரூ.65 வரம்புடைய கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்படுகிறது. இலகு வகை வாகனங்களுக்கு தற்போது ரூ.115 கட்டணம் ரூ.120 ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் டோல்கேட் கட்டணங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை முதல் பாடாலூர் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. செங்குறிச்சி டோல்கேட்டில் கார், ஜீப் வாகனங்களுக்கு தற்போது ரூ.65 வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்படவுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ரூ.115 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.120 ஆக உயர்த்தப்படுகிறது.

இந்த உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கூடுதல் செலவினத்தை சந்திக்க வேண்டும், மேலும் இதனால் வாடிக்கையாளர் பொருட்களின் விலை உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது

Trending News

Latest News

You May Like