1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் ஷாக்..! மேம்பாலத்தின் கீழ் சென்ற கார் மீது விழுந்த கனமான பொருள்..!

Q

அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பால பணிகள் நடைபெற்ற வருகிறது. 
 
இந்த சாலை வழியே வரக்கூடிய ஹோப்ஸ் காலேஜ் மற்றும் ஃபன் மால் சந்திப்பு பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றின் மீது மேம்பாலத்தில் இருந்து கனமான ஒரு பொருள் விழுந்ததால் அந்த கார் சேதமானது. இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவை விமான நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவ நிபுணர் ஒருவர் நஞ்சுண்டாபுரம் சாலை வழியே உள்ள தனது இல்லத்திற்கு தன் சொகுசு காரல் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
அந்த சொகுசு காரின் முகப்பு கண்ணாடியில் இந்த கனமான பொருள் விழுந்து சேரத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பாக இருக்க கூடிய அந்த சாலையில் தனது காரை நிறுத்தி ஆராய்ந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அவர் தனது காரை நேராக வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்.
 
இந்த விலையுயர்ந்த சொகுசு காரின் முகப்பு கண்ணாடியை சரி செய்ய ரூ. 1 லட்சம் செலவாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்த சேதாரத்தை சரி செய்ய ஏற்படும் செலவு குறித்து அந்த மருத்துவர் கவலைப்படவில்லை. ஒருவேளை இரண்டு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மேலும் இந்த கனமான பொருள் விழுந்து இருந்தால் நிலைமை முற்றிலுமே மிக விபரீதமாக மாறி இருக்கும் என்பதால் கட்டுமான பணிகள் நடைபெற்ற வரும் இந்த மேம்பாலத்தின் கீழ் வாகன ஓட்டிகளின் செல்வதால் அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவருடைய வேண்டுகோளாக உள்ளது.
 
இதே போல ஒரு சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவிநாசி சாலையில் இந்த மேம்பாலத்தின் கீழ் ஒரு கார் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Trending News

Latest News

You May Like