தி.மு.க. ஆட்சி மீது தாய்மார்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ..!
மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 4-ம்பகுதி, தெற்கு 5-ம் பகுதி அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் ஜோசப்தனிஸ்லாஸ், முக்கூரான் ஆகியோர் தலைமையில் இந்திரா நகரில் நடைபெற்ற புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் அட்டைகளை கவுன்சிலர் முத்துமாரி ஜெயக்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர். அண்ணாதுரை, பா.குமார், சண்முகவள்ளி,வி.பி.ஆர்.செல்வகுமார், ஓட்டுநர் அணி திருமுருகன்,மலர்விழி, யு.எல்.கோபி, நாகேந்திரன், ராணிநல்லுச்சாமி, ராமமூர்த்தி, தினகரன், பால்கடை கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் யார் ஆட்சி செய்யவேண்டும் என்று வாக்களித்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு. சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தி.மு.க.வை மக்கள் தூக்கிஏறிந்து விடுவார்கள். காரணம் மின்கட்டணம், எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை மற்றும் போதை பொருள் நடமாட்டம் என அதிகரித்து தமிழகத்தில் போதை ஆறாக ஓடுகிறது. வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விலை ஏறிவிட்டது. தாய்மார்கள் தி.மு.க.ஆட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
திமுக ஆட்சி இன்றைக்கு நடக்கிறது. திமுக ஒருமுறை ஆட்சி செய்தால் மற்றொரு முறை ஆட்சிக்கு வரமாட்டார்கள். கருணாநிதியாலே தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாத போது ஸ்டாலின் ஆல் முடியாது. விலைவாசி ஏற்றம், போதை புழக்கம் அதிகரித்து உள்ளதை கட்டுப்படுத்த முடியவில்லை,குறிப்பாக திமுக கட்சிக்காரர்களை அடக்கவே முடியாமல் திணறுவதாக தெரிவித்தார்.மேலும் தான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறினார் என்ன ஆனது.தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதாக திமுக அரசு சொன்னாலும் கட்சிக்காரர்களை சமாளிக்க முடியாமல் சிகிச்சை பெறவை அமெரிக்கா செல்கிறார்.
இன்றைக்கு கலைஞருக்கு நாணயம் வெளியிட்டார்கள். அதில் கூட்டணியில் இருந்த காங்கிரசை தி.மு.க. கழட்டி விட்டது. அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி திணறுகின்றனர். எனவே மத்தியில் பா.ஜ.க.சுமூக உறவை வைத்துக்கொள்ளதான் தி.மு.க. இன்றைக்கு பா.ஜ.க.வை அழைத்து கலைஞர் நாணயத்தை வெளியிட்டது. இனிவரும் காலங்களில் இரட்டை வேடம் போடும் தி.மு.க.வை சிறுபான்மையினை மக்கள் நம்பமாட்டார்கள். எனவேதான் வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டி எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.ஏழை மக்களின் கற்பக விருச்சம் அதிமுக தொண்டனும் முதல்வர் ஆகலாம். உரிமை சீட்டு வார்டு பெறும் வார்டு செயலாளர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.