மருமகன் மண்டையை உடைத்த மாமியார்.. பதிலுக்கு கத்தி குத்து.. இருவருக்கும் தீவிர சிகிச்சை !!

மருமகன் மண்டையை மாமியார் உடைத்ததால், பதிலுக்கு கடும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி கிழக்கு காட்டு வளவை சேர்ந்தவர் பச்சியம்மாள்(40). இவரது கணவர் சரவணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பச்சியம்மாள், சிவக்குமார் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டு, அவருடன் வாழ்ந்து வருகிறார். பச்சியம்மாளின் மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், கணவர் கலைச்செல்வனுடன் வசித்த வருகிறார்.
இந்த நிலையில், பச்சியம்மாளின் மகள் பிரியதர்சினிக்கும் அவரது கணவர் கலைச்செல்வனுக்கும் இடையே நேற்றுமுன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தாய் பச்சியம்மாளுக்கு பிரியதர்ஷினி தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இரவு 10 மணிக்கு மகள் வீட்டிற்கு வந்த பச்சியம்மாள், மகளுடன் தகராறு செய்த மருமகன் கலைச்செல்வனிடம் கேட்டுள்ளார். அப்போது, இதனால் மருமகனுக்கும், மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், உன்னைப்போல எனது மனைவியையும் கெடுத்து விடாதே என்று மருமகன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாமியார் பச்சியம்மாள், வீட்டில் அருகே கிடந்த இரும்பு பைப்பால் மருமகனின் மண்டையை அடித்து உடைத்துள்ளார். ரத்தம் வடிந்த நிலையில் கலைச்செல்வன், மாமியாரை கத்தியால் பதிலுக்கு குத்தியுள்ளார். இதில் அவரது கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு அவரும் சரிந்துள்ளார். இருவரும் கீழே விழுந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மோதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in