ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் மாமியார் திடீர் கைது..!

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணமாகி 7 8 நாட்களே ஆன நிலையில் ரிதன்யா கடந்த 28ஆம் தேதி அன்று ஒண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் சேயூர் அருகே சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு தென்னை மரங்களுக்கு தெளிக்கப்படும் மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன் ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தன்னை வரதட்சணை கேட்டு மாமியார் சித்ராதேவி, மாமனார் கொடுமைப்படுத்துவதாகவும் , கணவர் கவின்குமார் உடல் அளவிலும் மனதளவிலும் கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். இதற்கு மேல் தன்னால் வாழமுடியாது என்றும், நகரவேதனையை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். என்னுடைய தற்கொலைக்கு மாமனார் , மாமியார் மற்றும் கணவர் கவின்குமார் தான் காரணம் எனத் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து ரிதன்யாவின் உறவினர்கள் தற்கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணவர் கவின்குமார், மாமனாரை கைது செய்தது.இதனை தொடர்ந்து ரிதன்யாவின் பெற்றோர் மாப்பிள்ளை கவின்குமார் மீது பகிரங்க குற்றசாட்டுகளை முன் வைத்தார். ரிதன்யாவிற்கு திருமணமான இரண்டு வாரங்களில் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மீதமுள்ள 200 சவரன் நகை எப்போது தருவார்கள் என்றும் கவினுக்கு தொழில் தொடங்க பணம் தேவைப்படுகிறது. இதனை வாங்கி வருமாறு ரிதன்யாவை கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தனது மகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.
ரிதன்யாவின் தாய் கூறுகையில்,’’என்னுடைய மகளை உடல் ரீதியாக கொடுமைப்படுத்தி உள்ளார். குளியலறைக்கு செல்லும் போது கூட கவின் உடன் செல்வார். தனியாக விடமாட்டார் என்று கூறியிருந்தார். மேலும் இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலையிடு இருப்பதாக கூறி ரிதன்யாவின் தந்தை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விசாரணையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்து இருந்தார். இந்த நிலையில் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.