1. Home
  2. தமிழ்நாடு

அன்னை தெரசா பல்கலை. பட்டமளிப்பு விழா : கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு..!

1

அன்னைதெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா வருகிற 31-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, டெல்லி அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இந்த விழாவில் 15,375 மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 785 மாணவிகள் நேரடியாக கவர்னரிடம் பட்டங்களை பெறுகின்றனர். 40 மாணவிகள் தங்களது துறைகளில் பதக்கங்கள் பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் மாணவிகளுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல் நடத்துகிறார்.

 30-வது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவிகள் டாக்டர் பட்டம் பெறுகின்றனர். மேலும் 76 மாணவிகள் எம்.பில் பட்டம் பெறுகின்றனர். 

கடந்த 2010-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் தலைமையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதன்முறையாக கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அப்துல்கலாம் கலந்து கொண்டார். 

தற்போது 2-வது முறையாக கொடைக்கானல் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like