தாயின் அலட்சியம்.. தொட்டிலின் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு!

தாயின் அலட்சியம்.. தொட்டிலின் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு!

தாயின் அலட்சியம்.. தொட்டிலின் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு!
X

சென்னையில் தொட்டில் கயிறு கழுத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எழும்பூரில் வசித்து வரும் அப்துல் ஹாதி என்பவரின்  பேரன் முகமது தெக்கி தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். தெக்கியின் தந்தை அகமத் துபாயில் பணி புரிந்து வரும் நிலையில், தன் தாத்தா மற்றும் தாயுடன் தெக்கி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வீட்டில் உள்ள தொட்டிலில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தொட்டிலின் கயிறு கழுத்தை இறுக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் மயங்கி விழுந்தான்.


சிறுவனின் தாய் உடனடியாக எழும்பூர் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேத்துபட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21ஆம் தேதி சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் தெக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

newstm.in

Next Story
Share it