இறந்த மகனின் சொத்தில் தாய் பங்கு கேட்கும் உரிமை இல்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
இந்தியாவில் வாரிசு உரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, நாகபட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என மோசஸ் தாயார் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதன் பின்னர், தாயாருக்கு மகனின் சொத்தில் உரிமை உண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மோசஸின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மோசஸின் மனைவிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் மோசஸ் தாயார் சொத்தில் பங்கு கொண்டாட முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மோசஸின் மனைவிக்கு குழந்தை இல்லாத நிலையில் அவரின் தந்தைக்கு சொத்து வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது வாரிசு உள்ள நிலையில் தாய் சொத்தில் பங்கு கேட்க உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.