ஒன்றரை வயது மகனுடன் தூக்கில் தொங்கிய தாய்.. கணவர், மாமியார் கைது !

சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் ரஞ்சித் குமார் - பாக்கியலட்சுமி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மித்ரன் என்ற மகன் இருந்தான்.
இந்நிலையில், வீட்டில் சேட்டை செய்த ஒன்றரை வயது மகனை தாய் பாக்கியலட்சுமி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவரான ரஞ்சித் கண்டித்ததால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு மனைவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், தனியாக இருந்தப்போது ஒன்றை வயது மகனுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசாரும் தாய், மகனின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது குழந்தையை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்யவில்லை, கணவன் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கணவர் ரஞ்சித் குமார் மற்றும் பாக்கியலட்சுமியின் மாமியார் சாந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
newstm.in