1. Home
  2. தமிழ்நாடு

திருமணமாகாமல் பிறந்த குழந்தை… தியேட்டரில் வைத்து எரித்த தாய்!

திருமணமாகாமல் பிறந்த குழந்தை… தியேட்டரில் வைத்து எரித்த தாய்!


திருமணமாகாமல் பிறந்த குழந்தையை அந்த தாய் திரையரங்கில் வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டம்  சங்கரன்கோவிலில் உள்ள கோமதிசங்கர் திரையரங்கில் இருந்து புகை வந்ததை அடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கடும் அதிர்ச்சி உள்ளானர்கள்.

அங்கு பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாதி எரிந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை உடற்கூராய்வு நடத்த அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை சங்குபுரம் 6ஆவது பகுதியைச்சேர்ந்த கோமதி(21) என்ற பெண்ணின் குழந்தை என்பது தெரியவந்தது.

ஒருவரை காதலித்து வந்த கோமதி, சில நாட்களில் கரப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை கலைக்க குடும்பத்தினர் முயன்சி செய்த நிலையில், குறிப்பிட்ட நாட்களை கடந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியவில்லை என தெரிகிறது. எனவே குழந்தை பிறந்ததும் கொன்றுவிடலாம் என்று திட்டமிட்டனர்.

திட்டப்படி குழந்தை பிறந்து, நான்கு நாட்கள் கழித்து, மூடிக்கிடந்த திரையங்க வளாகத்திற்குள் சென்று, தாய் இந்திராணியுடன் சேர்ந்து குழந்தையை உயிருடன் எரித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார் கோமதி. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like