1. Home
  2. தமிழ்நாடு

என்னையே முழுசா மறந்திருவேனோ பயமா இருக்கு பா... பட்டையை கிளப்பும் மாரீசன் படத்தின் ட்ரைலர்..!

1

ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது திரைப்படமாக உருவாகி இருக்கும் படம் 'மாரீசன்' .இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

 

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'மாமன்னன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து 'மாரீசன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். 'மாரீசன்' திரைப்படம் வருகிற 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில் 'மாரீசன்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரெய்லர் ஜூலை 14 மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

டிரைலரில், ஃபஹத் ஃபாசில் திருட்டில் ஈடுபடுபவராகவும் வடிவேலு ஞாபக மறதி நோயுடன் போராடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like